உக்ரைனில் குண்டுவீசுவதை நிறுத்துமாறு புதினிடம் கேட்கும் அளவுக்கு மோடிக்கு மதிப்பு உள்ளது - ராஜ்நாத் சிங்


உக்ரைனில் குண்டுவீசுவதை நிறுத்துமாறு புதினிடம் கேட்கும் அளவுக்கு மோடிக்கு மதிப்பு உள்ளது - ராஜ்நாத் சிங்
x

உக்ரைனில் குண்டுவீசுவதை நிறுத்துமாறு புதினிடம் கேட்கும் அளவுக்கு மோடிக்கு மதிப்பு உள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புனே,

மராட்டிய மாநிலம் புனேவில் பாஜக கட்சி சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

அப்போது பேசிய ராஜ்நாத் சிங், கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் நன்மதிப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக சர்வதேச அரங்கில் இந்தியா பேசும்போது யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், தற்போது சர்வதேச அரங்கில் இந்தியா பேசினால் உலகம் கேட்கிறது.

இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறும்வரை உக்ரைனில் குண்டு வீசுவதை நிறுத்தும்படி ரஷிய அதிபரிடம் கேட்கும் அளவுக்கு பிரதமர் மோடிக்கு மதிப்பு உள்ளது' என்றார்.


Next Story