பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது - அமெரிக்கா


பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது - அமெரிக்கா
x

இது போருக்கான யுகமல்ல என்ற பிரதமா் மோடியின் வாா்த்தைகள் பாராட்டுக்குரியவை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவுக்கு வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை இணைமந்திரி ரிச்சா்ட் ஆா் வா்மா, டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது, பிரதமா் மோடியின் போலந்து, உக்ரைன் பயணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, 'பிரதமா் மோடியின் உக்ரைன் பயணம் மகிழ்ச்சியளிக்கிறது. அவரது இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ரஷியாவுடனான இந்தியாவின் நீண்ட கால உறவை அமெரிக்கா புரிந்துகொண்டுள்ளது. இது போருக்கான யுகமல்ல என்ற பிரதமா் மோடியின் வாா்த்தைகள் பாராட்டுக்குரியவை' என்று அவா் பதிலளித்தாா்.

போலந்து நாட்டுக்கு சென்றுள்ள பிரதமா் மோடி, அங்கிருந்து உக்ரைனுக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி செல்லவிருக்கும் நிலையில், அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.

கடந்த ஜூலை 8-9 தேதிகளில் பிரதமா் மோடி ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டாா். வாஷிங்டனில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெற்ற நேரத்தில், அவா் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டது தொடா்பாக அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகள் அதிருப்தி தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story