ரூ.3.70 லட்சத்திற்காக நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை


ரூ.3.70 லட்சத்திற்காக நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

ரூ.3.70 லட்சத்திற்காக நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநகர் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

ராமநகர்:

ரூ.3.70 லட்சத்திற்காக நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநகர் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

நண்பர் கொலை

பெங்களூரு புறநகர் மாவட்டம் நிடவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது நண்பர் நெலமங்களா அருகே பூதிகால் பகுதியை சேர்ந்த முனி கிருஷ்ணா(வயது 33). கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி மஞ்சுநாத்தும், முனி கிருஷ்ணாவும் ராமநகர் மாவட்டத்திற்கு சுற்றுலா புறப்பட்டு சென்றிருந்தனர். அப்போது செல்லும் வழியில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் காரை நிறுத்தி ரூ.30 ஆயிரத்தை மஞ்சுநாத் எடுத்திருந்தார்.

மேலும் அவரது வங்கி கணக்கில் ரூ.3.70 லட்சம் இருந்தது. இதுபற்றி முனி கிருஷ்ணாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து, மஞ்சுநாத்தை கொலை செய்ய அவர் திட்டமிட்டார். பின்னர் ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா குதூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து இருவரும் மதுஅருந்தி உள்ளனர். குடிபோதையில் மஞ்சுநாத் தலையில் கல்லைப்போட்டு முனி கிருஷ்ணா கொலை செய்திருந்தார். மேலும் பெட்ரோல் ஊற்றி அவரது உடலையும் எரித்திருந்தார்.

வாலிபருக்கு ஆயுள் தண்டனை

அதன்பிறகு, மஞ்சுநாத் ஏ.டி.எம். கார்டை கொள்ளையடித்து சென்று ரூ.3.70 லட்சத்தையும் முனி கிருஷ்ணா எடுத்திருந்தார். இதுகுறித்து குதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனி கிருஷ்ணாவை கைது செய்திருந்தார்கள். மஞ்சுநாத் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அவர் பணம் எடுத்திருந்ததால் போலீசாரிடம் சிக்கி இருந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக ராமநகர் மாவட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகையையும் போலீசார் தாக்கல் செய்திருந்தார்கள்.

அதன்படி, கடந்த 10 ஆண்டுகளாக ராமநகர் மாவட்ட கோர்ட்டில் மஞ்சுநாத் கொலை வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி தேவராஜ் தீர்ப்பு கூறினார். அப்போது மஞ்சுநாத்தை, முனி கிருஷ்ணா கொலை செய்தது ஆதாரத்துடன் நிரூபணமாகி இருந்ததால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தேவராஜ் உத்தரவிட்டார்.


Next Story