மெட்ரோ ரெயில் சேவை நாளை ரத்து
பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோ ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி இடையே மெட்ரோ பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு குறித்த ஆய்வு பணி நடைபெறுவதை முன்னிட்டு மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வருகிற 27-ந் தேதி (நாளை) கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி மற்றும் கெங்கேரி-செல்லகட்டா இடையே பாதுகாப்பு சோதனை நடைபெற உள்ளது.
இதனால் அன்றைய தினம் மைசூரு ரோடு முதல் கெங்கேரி வரையிலும், பைப்பனஹள்ளி-சுவாமி விவேகானந்தா நிலையம் இடையேவும் மெட்ரோ சேவை காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் ஒயிட்பீல்டு-கே.ஆர்.புரம் இடையேவும் மெட்ரோ ரெயில் இயங்காது. பச்சை நிற வழித்தடத்தில் வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story