ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்


ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 20 Feb 2024 9:52 AM IST (Updated: 20 Feb 2024 10:03 AM IST)
t-max-icont-min-icon

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7-ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீ நகர்,

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் கிஸ்துவார் பகுதியில் இன்று காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7-ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story