'சார்லி-777' கன்னட படத்திற்கு தேசிய விருது


சார்லி-777 கன்னட படத்திற்கு தேசிய விருது
x

கன்னட திரைப்படமான ‘சார்லி-777’ கன்னட படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

பெங்களூரு:

மத்திய அரசு நேற்று 2021-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்-நடிகைகள், சிறந்த படங்கள் உள்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அறிவித்தது. இதில் கன்னட திரைத்துறையில் 2 படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கிரண்ராஜ் இயக்கத்தில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான 'சார்லி-777' திரைப்படம், சிறந்த மாநில பட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தில் நடித்த நாய் அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது. அந்த படத்தை பார்த்த முன்னாள் முதல்-மந்திாி பசவராஜ் பொம்மை கண்ணீர் விட்டு அழுதார். அந்த படம் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. மேலும் 'பாலே பங்காரா' என்ற கன்னட படத்திற்கும் சிறந்த படத்திற்கான விருது கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் அனிருத் ஜக்கர் இயக்கினார்.

கன்னடத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 10-ந் தேதி வெளியான திரைப்படம் சார்லி-777. இதில் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்துள்ளார்.

ரிஷப் ஷெட்டிக்கு தர்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சார்லியாக லாப்ரடோர் என்ற இனத்தை சேர்ந்த வளர்ப்பு நாய் நடித்துள்ளது. மைசூருவில் உள்ள சின்மயா காலனியில் தர்மா வசித்து வருகிறார். தொழிற்சாலை, வீடு, மது குடிப்பது, சார்லி சாப்ளின் திரைப்படம் பார்ப்பதுதான் தர்மாவின் வேலை. ஊர் மக்களிடம் பேசுவது இல்லை. இதேபோல நாய் ஒரு வீட்டில் மற்ற நாய்களுடன் வளர்க்கிறது. அங்கு சக நாய்களுக்கு நடக்கும் கொடுமையை பார்த்து, லாப்ரடோர் நாய் தப்பியோடி சின்மயா காலனிக்கு வருகிறது. நாயும், தர்மாவும் ஒரு இசை நிகழ்ச்சியில் சந்திக்கின்றனர். தர்மா ஏற்கனவே தனது தாய், சகோதரியை நாய் ஒன்று ஏற்படுத்திய விபத்தில் இழந்துவிடுகிறார்.

இதனால் நாய்களை கண்டால் அவருக்கு வெறுப்பு உள்ளது. இருப்பினும் அந்த லாப்ரடோர் நாயின் பாசம், பரிவால் தர்மா ஈர்க்கப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக நாயுடன் தர்மா ஒரே இடத்தில் வசிக்க தொடங்குகிறார். அப்போது தர்மா, அந்த நாய்க்கு சார்லி என்று பெயர் வைக்கிறார். ஊர் மக்கள் தர்மா மற்றும் நாய் சார்லியை வெறுக்கின்றனர். இதை அறிந்த இருவரும் வட மாநிலத்திற்கு செல்கின்றனர்.

சார்லிக்கு தடகள போட்டியில் ஆர்வம் அதிகம். இதற்காக இமாசலபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலத்திற்கு சென்று பயிற்சி அளிக்கிறார். அதேபோல தடகள போட்டியில் நாய் சார்லி கலந்து கொண்டு வெற்றி பெறுகிறது. திரைப்படத்தில் இந்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி உருவாக்கப்பட்டிருந்தது. இந்த போட்டிக்கு பின்னர் நாய்க்கு புற்றுநோய் நோய் இருப்பது தர்மாவுக்கு தெரிகிறது. இதையடுத்து நாயின் தேவை அனைத்தையும் தர்மா பூர்த்தி செய்கிறார். மேலும் சார்லியை அதே இன நாயுடன் இனப்பெருக்கத்திற்காக விடுகிறார். இதில் சார்லி கர்ப்பமாகிறது. இறுதியாக அந்த சார்லி நாய், ஒரு குட்டியை ஈன்று தர்மாவிடம் கொடுத்துவிட்டு இறந்துவிடுகிறது. சார்லியின் செயல்பாட்டை பார்த்து மைசூரு சின்மயா காலனி மக்கள், அதை ஊர்மரியாதையுடன் அடக்கம் செய்கின்றனர். இவ்வாறு அந்த திரைப்படத்தின் கதை முடியும்.

இதில் சார்லியாக வந்த வளர்ப்பு நாயின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை வெகுமாக ஈர்த்தது. இதற்காக தற்போது சார்லி-777 திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story