'மாபியா கும்பல், குற்றவாளிகள் யாரும் இப்போது...' - உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அதிரடி
டெக்ஸ்டைல்ஸ் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெற்றது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹர்டொய் மாவட்டத்தில் புதிய டெக்ஸ்டைல்ஸ் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத்,
மாபியா கும்பல், குற்றவாளிகள் யாரும் இப்போது செல்போன் மூலம் தொடர்புகொண்டு தொழிலதிபர்களை மிரட்ட முடியாது. உத்தரபிரதேசம் வன்முறைகளுக்கு பெயர் போனது. சில மாவட்டங்களின் பெயர்களே மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தும். ஆனால் இப்போது பயப்பட தேவையில்லை. உத்தரபிரதேசத்தில் இப்போது சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
Related Tags :
Next Story