தேர்தல் அறிக்கை குழு தலைவராக ப.சிதம்பரம் நியமனம் - காங்கிரஸ் அறிவிப்பு


தேர்தல் அறிக்கை குழு தலைவராக ப.சிதம்பரம் நியமனம் - காங்கிரஸ் அறிவிப்பு
x

கோப்புப்படம்

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்த அடுத்த நாளில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி முன்னேற்பாடுகளை தொடங்கி இருக்கிறது. குறிப்பாக தேர்தலுக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் முக்கியமாக, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்த காங்கிரஸ் கட்சி அதன் தலைவராக முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தை நியமித்துள்ளது. ப.சிதம்பரம் தலைமையில் 16 பேர் இதற்காக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதன்படி சத்தீஷ்கார் முன்னாள் துணை முதல்-மந்திரி சிங் தியோ இந்த குழுவுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா, கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா, முன்னாள் மத்திய மந்திரிகள் ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சசிதரூர் எம்.பி. உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் உடனடியாக பணிகளை தொடங்குவார்கள் என காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story