'தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டதா என மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது' - செல்வப்பெருந்தகை


தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டதா என மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது - செல்வப்பெருந்தகை
x
தினத்தந்தி 17 March 2024 2:30 PM IST (Updated: 17 March 2024 5:14 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. சொல்லி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதன்படி நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனிடையே தேர்தல் தேதிகளை முடிவு செய்வதில் இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தமிழகத்திற்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடி குறுகிய காலத்தில் 5 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். மற்ற மாநிலங்களுக்கு அவர் ஏன் செல்லவில்லை? தேர்தல் தேதியை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டதா? அல்லது பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சொல்லி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது."

இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


Next Story