அடிமைத்தனத்தின் அடையாளங்களில் இருந்து நாட்டை விடுதலை செய்ய பிரதமர் மோடி அழைப்பு - அமித்ஷா பெருமிதம்
அடிமைத்தனத்தின் அடையாளங்களில் இருந்து நாட்டை விடுதலை செய்ய பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க.வின் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்பட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசுகையில், நாட்டில் எந்த சந்தேகமும் இல்லை. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டுமென மக்கள் தங்கள் மனதில் நினைத்துவிட்டனர்.
முதல்முறையாக அடிமைத்தனத்தின் அடையாளங்களில் இருந்து நாட்டை விடுதலை செய்ய பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த மறுநாளில் இருந்தே இது தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் ஆட்சியில் இருந்தவரை அவர்கள் நாட்டை அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்வது குறித்து நினைத்துக்கூட பார்க்கவில்லை. மோடி அரசு 3வது முறை ஆட்சிக்கு வரும்போது நாட்டில் பயங்கரவாதமும், நக்சலைட்டு ஆதிக்கமும் முடிவுக்கு வரும்' என்றார்.