சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை-மகன் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த தந்தையையும், மகனையும் போலீசார் கைது செய்தனர்.
சுங்கதகட்டே:
பெங்களூரு காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுங்கத கட்டே அருகே சந்தன் லே-அவுட்டில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 6 வயதில் மகள் இருக்கிறாள். அந்த சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் நாகராஜ், அவரது மகனும், 18 வயது நிரம்பாத சிறுவனும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிறுமியை தாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி சிறுமியிடம் கேட்ட போது தான் நாகராஜ், அவரது மகன் கடந்த சில நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதுபற்றி சிறுமியின் தாய், காமாட்சி பாளையா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் நாகராஜ், அவரது மகனை காமாட்சி பாளையா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு தந்தையும், மகனும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.