செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - நாளை விசாரணை


செந்தில் பாலாஜி ஜாமீன் மனு
x
தினத்தந்தி 15 May 2024 2:44 PM IST (Updated: 15 May 2024 4:07 PM IST)
t-max-icont-min-icon

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நாளை ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

ஜாமீன் வழங்க கோரியும், கைது நடவடிக்கைக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் வழக்கை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் வழக்கை மே 15ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் அடுத்த முறை நிச்சயம் விசாரணை நடைபெறும் என உறுதி அளித்தனர்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.

ஆனால், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

1 More update

Next Story