செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் - அமலாக்கத்துறை வாதம்
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை வாதிட்டது.
புதுடெல்லி,
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜியின் மனைவி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று 2-வது நாளாக சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார்.
வாதங்கள் விவரம் பின்வருமாறு:-
மருத்துவமனை, நீதிமன்ற காவலில் உள்ள காலத்தை விசாரணை காலமாக கருதக்கூடாது . ஊழல், பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜி மீது உள்ளன. வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தவிடாமல் அனைத்து வகையிலும் செந்தில்பாலாஜி தடுத்தார்.
வாக்குமூலங்களை பெற முயற்சித்தபோது செந்தில்பாலாஜி எந்த ஒத்துழைப்பும் தரவில்லை. ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால் தான் செந்தில்பாலாஜியை கைது செய்தோம். சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் செந்தில் பாலாஜி ஈடுபட்டிருந்தார் என்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. நீதிமன்ற காவலில் இருக்கும்போது ஒருவரை ஒப்படைக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது. செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை.
தனிப்பட்ட முறையில் செந்தில்பாலாஜியை விசாரிப்பது என்பது மிக மிக அவசியம். அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டு வருகிறார்.