காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது


காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது
x

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

18-வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அனைத்து வாக்குகளும் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும் ஆந்திரா, ஒடிஷா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலுக்கான 82 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை இதுவரை 2 கட்டங்களாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 39 வேட்பாளர்களும் இரண்டாம் கட்டமாக 43 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. ராகுல் காந்தியின் நடை பயணத்தின்போதும், அந்த கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜுன கார்கேவும் பல உத்தரவாதங்களை அளித்துள்ளனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் காங்கிரஸ் கட்சியின் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது.


Next Story