உத்தரபிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 4 பேர் கைது


உத்தரபிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 4 பேர் கைது
x

உத்தரபிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

லக்னோ,

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அவ்வாறு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்ட்டையும் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்.

இவ்வாறு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வசித்துவரும் நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையின் இன்று மீரட் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் திர்ஹடா பகுதியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த சோபிப் கான், முகமது மொடு கான், முகமது மஜ்தல் கான், மொசீம் கான் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து போலி ஆதார் அட்டைகள், 5 எடிஎம் கார்டுகள், 2 பான் கார்டுகள், 2 வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட வங்காளதேசத்தினர் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story