குடும்ப தகராறில் பெண் அடித்து கொலை; கணவர் கைது


குடும்ப தகராறில் பெண் அடித்து கொலை; கணவர் கைது
x

குடும்ப தகராறில் பெண்ணை அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநகர்:

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவை சேர்ந்தவர் முத்து ராஜூ (வயது 38). இவரது மனைவி அம்பிகா (30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அம்பிகா, கணவரிடம் கோபித்து கொண்டு ஒசகோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு பிள்ளைகளுடன் சென்றார். தனியாக வசித்து வந்த முத்து ராஜூ, தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து வர ஒசகோட்டைக்கு சென்றார்.

பின்னர், தனது மனைவியை சமாதானம் செய்து தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு அழைத்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வரும்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்து ராஜூ, மோட்டார் சைக்கிளை நிறுத்தி அம்பிகாவை சரமாரியாக தாக்கினார். பின்னர் அங்கு கிடந்த கட்டையை எடுத்து தலையில் அடித்தார். இதில் அம்பிகா ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கனகபுரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து ராஜூைவ கைது செய்தனர்.


Next Story