ஆம் ஆத்மி-காங்கிரஸ் பூஜ்ஜிய கூட்டணி - அமித்ஷா விமர்சனம்
காங்கிரசின் ஊழலுக்கு எதிராக போராடி ஆட்சிக்கு வந்த ஆம்ஆத்மி இன்று தேர்தலுக்காக அந்த கட்சியுடனே கூட்டணி வைத்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் 41 கிராமங்களில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோக திட்டம் மற்றும் 178 கிராமங்களில் கிராமோதயா திட்ட மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றின் தொடக்க விழா நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா திட்டங்களை தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய அமித்ஷா ஆம்ஆத்மியை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "டெல்லியில் காங்கிரசின் ஊழலுக்கு எதிராக போராடி ஆட்சிக்கு வந்த ஆம்ஆத்மி இன்று மக்களவை தேர்தலுக்காக அந்த கட்சியுடனே கூட்டணி வைத்துள்ளது. நீங்கள், காங்கிரசுடன் கூட்டணி வைத்தாலும் சரி அல்லது இணைந்தாலும் சரி எதுவும் நடக்கப்போவதில்லை. ஏனென்றால் பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியமாகவே இருக்கும். மோடி 400 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைப்பார்" என்று அமித் ஷா கூறினார்.
Related Tags :
Next Story