வெடி விபத்தில் இறந்த 14 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்


வெடி விபத்தில் இறந்த 14 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
x

வெடி விபத்தில் இறந்த 14 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

விருதுநகர்

விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர், பிரதமர் மோடிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெங்கபாளையம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பெண்கள் உள்பட 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் கிச்சநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு தொழிலாளி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். ஒரேநாளில் நடைபெற்ற 2 விபத்துகளில் 14 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். பட்டாசு தொழிலை மிகவும் பாதுகாப்பான தொழிலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்து வருகிறேன். வெடி விபத்தில் இறந்த அப்பாவி பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் மத்திய அரசு சார்பில் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை மாணிக்கம்தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story