காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து வாகன சோதனையில் கடந்த மாதம் ரூ.11¼ லட்சம் அபராதம்


காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து வாகன சோதனையில் கடந்த மாதம் ரூ.11¼ லட்சம் அபராதம்
x

காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து வாகன சோதனையில் கடந்த மாதத்தில் மட்டும் ரூ.11 லட்சத்து 29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

தணிக்கை அறிக்கை

காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சீபுரம் போன்ற பகுதிகளில் இணை போக்குவரத்து ஆணையர் சென்னை தெற்கு சரகம் ஜெய்சங்கரன் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சீபுரம் பகுதிகளில் வாகன சோதனையின்போது 1100 வாகனங்களை தணிக்கை செய்து 115 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

ரூ.11 லட்சத்து 29 ஆயிரத்து 644

இதன் மூலம் ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 100 உடனடி அபராதமாக வசூலிக்கப்பட்டது, ரூ.9 லட்சத்து 44 ஆயிரத்து 500 இணக்கட்டணம் நிர்ணயம் செய்தும் 8,064 வரியாகவும் என மொத்தம் ரூ.11 லட்சத்து 29 ஆயிரத்து 644 மொத்தமாக வாகன தணிக்கையின்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் 22 வாகனங்கள் தகுதி சான்றிதழ் இல்லாமலும், சாலை வரி செலுத்தாமல், கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்வது போன்ற காரணங்களுக்காக வாகனம் சிறைபிடிக்கப்பட்டு அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 12 லாரிகளுக்கு அதிக பாரம் ஏற்றியதற்கும், 21 வாகனங்கள் காப்பு சான்றிதழ் இல்லாமல் இருந்தது. 33 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருந்தது.

15 வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்பட்டதற்கும், 16 வாகனங்கள் இருக்கை பெல்ட் அணியாததற்கும், 30 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலை கவசம் அணியாமல் வாகனம் இயக்குதல் போன்ற அனைத்து குற்றங்களுக்கும் தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் போக்குவரத்து துறை சிறப்பு காவல் ஆய்வாளர் சுரேஷ் உடன் இருந்தார்.


Next Story