தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் - ரெயில்வே தகவல்


தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் - ரெயில்வே தகவல்
x

எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 5 லட்சம் பேர் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

சென்னை,

தீபாவளி பண்டிகை 12-ந்தேதி(நாளை) கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர்களில் வேலை செய்பவர்கள் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, மங்களூரு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வியாழன், வெள்ளி மற்றும் இன்று காலை வரை, 3 நாட்களில் மொத்தம் 12 லட்சம் பயணிகள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ரெயில்கள் மூலம் பயணம் செய்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் எழும்பூரில் இருந்து 5 லட்சம் பேர் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்துள்ளனர். அதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து 7 லட்சம் பேர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

1 More update

Next Story