தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி டி.எஸ்.நகர் மற்றும் ஓட்டேரி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது சின்னசாமி (வயது 59), அசலாம் (59) இருவரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை கைப்பற்றினர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story