குடும்ப பெண் போல நடிக்க வைத்து இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடுமை - சென்னையில் 2 பேர் கைது
சென்னையில் குடும்ப பெண் போல நடிக்க வைத்து இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை
சென்னை நுங்கம்பாக்கம், ஜெயலட்சுமிபுரத்தில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக, விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்த வீட்டை விபசார தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த வீட்டில் குடும்ப பெண் போல, ஒரு இளம்பெண் வசித்தார். அவர் தினமும் காலையில் எழுந்து, வீட்டு முன்பு கோலம் போடுவார். பின்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவார். பகலில் குடும்ப பெண் போல வேடமிட்டு அக்கம் பக்கத்தினரை ஏமாற்றி வந்த அந்த பெண், இரவில் விபசாரத்தில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது.
அந்த வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்திய தனிப்படை போலீசார், அந்த பெண்ணை மீட்டனர். அந்த பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக, குப்புராஜா (வயது 45), நதியன் (38) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story