ஜெயலலிதா பங்களாவில் கொலை, கொள்ளை வழக்கு; மனோஜ், சயான் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு


ஜெயலலிதா பங்களாவில் கொலை, கொள்ளை வழக்கு; மனோஜ், சயான் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 Aug 2020 7:45 PM GMT (Updated: 2020-08-22T01:15:57+05:30)

ஜெயலலிதா பங்களாவில் கொலை, கொள்ளை வழக்கில் மனோஜ், சயான் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் காவலாளியை கொலை செய்து, அங்கு ஒரு கும்பல் கொள்ளை அடித்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவை சேர்ந்த மனோஜ், சயான் உள்பட 11 பேரை கைது செய்தனர். இதில் ஜாமீனில் வெளியே வந்த மனோஜ், சயான் ஆகியோர் சாட்சிகளை கலைத்ததாக குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஆனால், குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் விசாரித்தார். மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Next Story