தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி : பா.ஜ.க வரவேற்பு


தமிழகத்தில் அனைத்து  நாட்களிலும் வழிபாட்டு தலங்களை  திறக்க அனுமதி : பா.ஜ.க வரவேற்பு
x
தினத்தந்தி 14 Oct 2021 9:28 PM IST (Updated: 14 Oct 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அளித்த அனுமதிக்கு பா.ஜ.க வரவேற்பு தெரிவித்து உள்ளது.

சென்னை 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.  தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வந்தது.

அதனால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு இன்று அறிவித்தது.

அதன்படி   தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அனைத்து  நாட்களிலும் வழிபாட்டு தலங்களை  திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வெளியாகி உள்ள இந்த அறிவிப்பை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story