மாநில செய்திகள்

சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து + "||" + Chief minister M.K.Stalin greetings Chennai team

சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ஐ.பி.எல். போட்டியில் 4-வது முறையாக கோப்பையை வென்றுள்ள சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை,

14வது சீசன் ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை அணியிடம் இருந்து அருமையான ஆட்டம் வெளிப்பட்டது. 4-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் உலகெங்கிலும் இருக்கிற ஒவ்வொரு ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இந்த வெற்றியை கொண்டாட சென்னை, தோனிக்காக அன்புடன் காத்திருக்கிறது. இவ்வாறு அவர்  பதிவிட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல்: வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
2. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா: டோனி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.
3. ஐபிஎல் 2021: விருது பெற்றவர்கள் முழு விவரம்..!
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது
4. வெளியேற்றுதல் சுற்று ஆட்டம்- கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். இல் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 138 ரன்கள் எடுத்துள்ளது.
5. ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு 137 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு 137 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்தது.