பேரறிவாளனின் விடுதலை: ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி - அதிமுக
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தளராத சட்டப் போராட்டத்தினால் சுப்ரீம்கோர்ட் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கூட்டாக தெரிவித்துள்ளனர்.
சென்னை,
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் தமிழக தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தளராத சட்டப் போராட்டத்தினால் சுப்ரீம்கோர்ட் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் விடுதலை:
“புரட்சித் தலைவி அம்மா அவர்களின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி;
நிகரற்ற தலைவர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் துணிச்சல் மிகுந்த நிர்வாகம், அம்மா அரசின் நிர்வாகம் என்பது மீண்டும் நிரூபணம் ! ” என்று அதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பேரறிவாளன் விடுதலை
— AIADMK (@AIADMKOfficial) May 18, 2022
“புரட்சித் தலைவி அம்மா அவர்களின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி;
நிகரற்ற தலைவர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் துணிச்சல் மிகுந்த நிர்வாகம், அம்மா அரசின் நிர்வாகம் என்பது மீண்டும் நிரூபணம் ! #Perarivalanpic.twitter.com/5MYPwDsok3
Related Tags :
Next Story