வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
x

காஞ்சீபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தவேலூர், தர்காமேட்டையை சேர்ந்த பிரகாஷ் (வயது31) என்பவர் தனது காரில் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜகுளம் அருகே அவரது காரை, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வழிமறித்து கற்களால் கார் கண்ணாடியை உடைத்து, காரில் இருந்த பிரகாஷை கீழே இறக்கி அடித்து அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.1,200-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து உடனடியாக பிரகாஷ் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையம் மற்றும் ரோந்து போலீசாருக்கும் அறிவுறுத்தினார். இது சம்பந்தமாக காஞ்சீபுரம் தாலுகா போலீசார் அடங்கிய குழுவினர் விரைந்து செயல்பட்டு காஞ்சீபுரம் பெரிய காரையை சேர்ந்த ரவிச்சந்திரன் (21), ருத்திரமூர்த்தி (21), ராஜி (21) ஆகியோரை கைது செய்தனர்.

குற்றம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த குழுவினரை காஞ்சீபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சத்யபிரியா, மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் ஆகியோர் வெகுமதி அளித்து பாராட்டினார்கள்.


Next Story