மெரினாவில் தூங்கிய வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி செல்போன்-பணம் பறிப்பு - 4 பேர் கைது


மெரினாவில் தூங்கிய வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி செல்போன்-பணம் பறிப்பு - 4 பேர் கைது
x

சென்னை மெரினாவில் தூங்கிய வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி செல்போன், பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் வீரமாமுனிவர் சிலையின் பின்புறம் நேற்று முன்தினம் இரவு பீமாராவ் (வயது 35), சபீர் (29) ஆகிய வட மாநில தொழிலாளர்கள் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்களை 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து தாக்கினார்கள். அரிவாளால் வெட்டியதாகவும் தெரிகிறது.

வடமாநில தொழிலாளர்கள் வைத்திருந்த 2 செல்போன்களையும், ரூ.2 ஆயிரத்தையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பறித்து சென்றுவிட்டனர். இதுதொடர்பாக மெரினா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மெரினா போலீசார் விரைந்து வந்து, ரத்த வெள்ளத்தில் காயம் அடைந்து கிடந்த வடமாநில தொழிலாளர்கள் பீமாராவ், சபீர் ஆகியோரை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த மெரினா போலீசார், மாட்டான்குப்பத்தை சேர்ந்த கார்த்திக், சலீம், ஜீவா, விக்னேஷ் ஆகிய 4 பேரையும் உடனடியாக கைது செய்தனர்.

1 More update

Next Story