திருவொற்றியூரில் 2 டன் பருப்பு மூட்டைகளை திருடிய வழக்கில் 4 பேர் கைது


திருவொற்றியூரில் 2 டன் பருப்பு மூட்டைகளை திருடிய வழக்கில் 4 பேர் கைது
x

திருவொற்றியூரில் 2 டன் பருப்பு மூட்டைகளை திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

சென்னை திருவொற்றியூரில் உள்ள மத்திய அரசு நிறுவனத்துக்கு சொந்தமான கான்கார்டு கன்டெய்னர் யார்டுக்கு கடந்த மே மாதம், மராட்டியத்தில் இருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகம் கொண்டு வரப்பட்ட உளுந்தம் பருப்பு மூட்டைகள் கன்டெய்னர் லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. மர்மநபர்கள் சிலர் கன்டெய்னர் யார்டில் வைக்கப்பட்டு இருந்த அந்த கன்டெய்னர் பெட்டியின் சீலை உடைத்து அதில் இருந்த சுமா‌ர் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2 டன் 300 கிலோ எடை கொண்ட உளுந்தம் பருப்பு மூட்டை களை திருடிச்சென்று விட்டனர். இது குறித்து கன்டெய்னர் யார்டு மேற்பார்வையாளர் ராம்குமார் அளித்த புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பருப்பு மூட்டைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திருவொற்றியூர் இந்திரா நகரைச் சேர்ந்த பர்னாபாஸ் (வயது 34), விக்னேஷ்(34), சதீஷ் (30), ஜெகநாதன்(25) ஆகியோர் தான் 2 டன் உளுந்தம் பருப்பை திருடியது தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பருப்பு மூட்டைகள் அனைத்தையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை செலவு செய்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் சிறையில் அடை க்கப்பட்டனர்.


Next Story