40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்- கனிமொழி எம்.பி


40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்- கனிமொழி எம்.பி
x
தினத்தந்தி 19 April 2024 10:24 AM IST (Updated: 19 April 2024 5:37 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் சாசனத்தை காக்க வேண்டும் என்ற தெளிவோடு மக்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி கூறினார்.

சென்னை,

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தி.மு.க. மகளிர் அணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது. அரசியல் சாசனத்தை காக்க வேண்டும் என்ற தெளிவோடு மக்கள் வந்து வாக்களிக்க வேண்டும். முதல் அமைச்சர் கூறியபடி தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மொத்த உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணி எதிர்க்கும் அளவிற்கு பா.ஜ.க.வினர் களத்திலேயே இல்லை' என்றார்

1 More update

Next Story