கடந்த மாதத்தில் மெட்ரோ ரெயில்களில் 70 லட்சம் பேர் பயணம்


கடந்த மாதத்தில் மெட்ரோ ரெயில்களில் 70 லட்சம் பேர் பயணம்
x

சென்னையில் கடந்த மாதத்தில் மெட்ரோ ரெயில்களில் 70 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

சென்னை

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பேரும், மார்ச் மாதத்தில் 69 லட்சத்து 99 ஆயிரத்து 341 பேரும் பயணித்துள்ளனர்.

பிப்ரவரி மாதத்தை காட்டிலும் மார்ச் மாதம் 6 லட்சத்து 30 ஆயிரத்து 59 பேர் கூடுதலாக பயணித்திருக்கிறார்கள். இதில் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 58 ஆயிரத்து 671 பேர் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவல் மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story