ஆரணியில் பால் வியாபாரியிடம் கத்தி முனையில் தங்க சங்கிலி பறிப்பு


ஆரணியில் பால் வியாபாரியிடம் கத்தி முனையில் தங்க சங்கிலி பறிப்பு
x

ஆரணியில் பால் வியாபாரியிடம் கத்தி முனையில் தங்க சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பினர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கண்ணூர் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது29). இவர் தண்டலச்சேரி பகுதியில் பால் டெப்போ ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று மாலை இவர் ஆரணி பஜார் வீதியில் உள்ள அம்மன் கோவில் அருகே கொரியர் சர்வீஸ் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் உதயகுமாரை வழிமறித்தனர். பின்னர், கத்திகை காட்டி மிரட்டி அவரை தாக்கி அவரது கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பினர்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து ஆரணி போலீஸ் நிலையத்தில் உதயகுமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி விசாரணயைில் தங்க சங்கியை பறித்தது ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர்களான தமிழ் என்கிற தமிழரசன் (25), கார்த்திக் (23) என்பது தெரிந்தது. பின்னர் அவர்களை கைது செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story