வரதட்சணை கொடுமை வழக்கில் கடலூர் போலீசாரால் தேடப்பட்டவர், சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்


வரதட்சணை கொடுமை வழக்கில் கடலூர் போலீசாரால் தேடப்பட்டவர், சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்
x

வரதட்சணை கொடுமை வழக்கில் கடலூர் போலீசாரால் தேடப்பட்டவர், சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கத்தாரில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த ராமலிங்கம் (வயது 46) என்பவர் நைஜீரியா நாட்டில் இருந்து கத்தார் வழியாக சென்னை வந்திருந்தார்.

அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2007-ம் ஆண்டு அவருடைய மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் அவர் இறந்ததாகவும், இதனால் ராமலிங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 15 ஆண்டுகளாக அவரை தேடி வருவதும் தெரிந்தது. இதையடுத்து ராமலிங்கத்தை பிடித்து விமான நிலையத்தில் உள்ள தனி அறையில் தங்கவைத்தனர். இதுபற்றி திட்டக்குடி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை வந்து ராமலிங்கத்தை அழைத்துச்செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story