வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

சென்னை அருகே வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னையை அடுத்த ஜல்லடையான்பேட்டை கிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் சம்பவ மூர்த்தி. இவர், ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவருடைய மனைவி சந்திரா. இவர்களுடைய 2-வது மகன் விக்னேஷ் (வயது 31). பாலிடெக்னிக் படித்து முடித்துள்ள இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மதுபோதைக்கு அடிமையான விக்னேஷ், வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து உள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் விரக்தி அடைந்த விக்னேஷ், நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story