புழல் அருகே ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதி பெண் பலி


புழல் அருகே ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதி பெண் பலி
x

புழல் அருகே ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதியதில் பெண் பலியானார்.

சென்னை

சென்னை அடுத்த புழல் சைக்கிள் ஷாப் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா வயது (35). இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் கதிர்வேடு நோக்கி வந்து கொண்டிருந்தார். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கதிர்வேடு ஜங்ஷனை கடக்கும்போது, மாதவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி வேகமாக வந்த டிப்பர் லாரி ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அகமது அப்துல் காதர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகிறார்.


Next Story