'பள்ளிக்கு வராத மாணவர்களை தேடிப் பிடித்து பொதுத்தேர்வு எழுத வைக்க வேண்டும்' - கல்வித்துறை அறிவுறுத்தல்
இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை சேகரித்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் அதனை கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடங்க உள்ளது. பள்ளிக்கு முறையாக வராத இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை சேகரித்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் அதனை கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளனர்.
இதன்படி இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என கூறப்படுகிறது. அந்த மாணவர்களை தேடிப் பிடித்து பொதுத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story