அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை


அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
x

அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை,

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு இன்றுடன் 52 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 52-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் இன்று களை கட்டியுள்ளன.

அ.தி.மு.க. அலுவலகத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வருங்கால முதல்வரே வாழ்க, பொதுச்செயலாளரே வாழ்க, தொண்டர்களின் பாதுகாவலரே வாழ்க என்பது போன்ற கோஷங்களை தொண்டர்கள் எழுப்பினார்கள்.

அதன்பின்னர் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தலைமை கழகத்தில் உள்ள அ.தி.மு.க. கொடியேற்றி வைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த விழாவில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அ.தி.மு.க. தலைமைக் கழகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.


Next Story