செங்கல்பட்டில் வங்கி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டில் வங்கி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
செங்கல்பட்டு
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் பா.ஜ.க.வை சேர்ந்த் எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூசன்சரண்சிங் என்பவரை கைது செய்ய வழியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பாக நேற்று செங்கல்பட்டு ஸ்டேட் வங்கி அலுவலம் முன்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி,செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான 50-க்கு மேற்பட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.
Related Tags :
Next Story