சாப்பாடு கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்: இரும்பு கம்பியால் மனைவி அடித்துக்கொலை - தொழிலாளி கைது


சாப்பாடு கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்: இரும்பு கம்பியால் மனைவி அடித்துக்கொலை - தொழிலாளி கைது
x

பொன்னேரி அருகே சாப்பாடு கொடுக்க தாமதமானதால் ஆத்திரத்தில் தொழிலாளி இரும்பு கம்பியால் மனைவியை அடித்து கொன்றார்.

திருவள்ளூர்

பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மடிமை கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் ரவி (வயது 65). கூலித்தொழிலாளி. வாய் பேச முடியாத ரவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவரது மனைவி ஜோதி (50). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இருவருக்கு வாய் பேச முடியாக நிலை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு ரவி மனைவியிடம் சாப்பாடு கேட்டார். சாப்பாடு கொடுக்க தாமதமானதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரவி இரும்பு கம்பியால் மனைவி ஜோதியை தலையில் அடித்தார். படுகாயமடைந்த ஜோதியின் அலறல் சத்தம் கேட்டு மாடியில் இருந்த மகன்கள் இறங்கி வந்து பார்த்தனர். அப்போது தாய் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மகன் ஜெயராமன் தாய் ஜோதியை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதியில் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற ரவியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story