வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வடமாநில தொழிலாளர்கள் கைது
திருவள்ளூர் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த கவுதம் (வயது 26), அமீத் பண்டிட் (23) ஆகிய 2 பேரும் தங்கி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தனர். மேற்கண்ட 2 பேரும் பாப்பரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நீலமேகம் என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுதம் மற்றும் அமீத் பண்டிட் ஆகியோர் வாடகை வீட்டின் பின்புறத்தில் திருட்டுத்தனமாக கஞ்சா செடி வைத்து வளர்த்து வருவதாக மணவாளநகர் போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story