கனகம்மாசத்திரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல் - 4 பேர் மீது வழக்கு


கனகம்மாசத்திரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல் - 4 பேர் மீது வழக்கு
x

கனகம்மாசத்திரம் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மாதவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 33). இவர் ஓசூர் பகுதியில் சிமெண்ட் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 18-ந்தேதி வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது திருத்தணி அடுத்த நல்லாட்டூர் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்படுத்தியதாக கூறி நல்லாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்அழகன், தமிழ்ச்செல்வன், தினகரன், அஜித் ஆகிய 4 பேரும் ஜேக்கபை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஜேக்கப் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து ஜேக்கப்பின் தாய் தாட்சாயணி கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

1 More update

Next Story