மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற பார் ஊழியர் கைது


மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற பார் ஊழியர் கைது
x

சென்னை முகப்பேர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற பார் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை முகப்பேர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. தகவலின் பேரில் போலீசார் முகப்பேர் கிழக்கு, வள்ளலார் தெருவில் உள்ள டாஸ்மாக் கடை வளாகத்திற்குள் இருந்த பாரை ரகசியமாக கண்காணித்தனர். அதில் பார் ஊழியரான அன்புரோஸ் (வயது 40) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் மது விற்றது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 592 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அன்புரோசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பார் உரிமையாளர் ஜெயராமை தேடி வருகின்றனர்.


Next Story