பில்கிஸ் பானு வழக்கு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது - எடப்பாடி பழனிசாமி


பில்கிஸ் பானு வழக்கு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது - எடப்பாடி பழனிசாமி
x

பில்கிஸ் பானு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது என எக்ஸ் தள பதிவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய சகோதரி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குழந்தை உள்பட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை முன்கூட்டியே குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து, பாதிக்கப்பட்ட சகோதரி தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அந்த விடுதலையை ரத்து செய்துள்ளது சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story