தமிழகத்தில் 20 தொகுதிகளில் பா.ஜ.க. போட்டி: அண்ணாமலை பேட்டி
பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்..
சென்னை,
சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி 39 தொகுதிகளுக்கான பங்கீடுகளை முடித்துள்ளது. தமிழகத்தில் 20 தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகள் 19 இடங்களில் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை எந்த நேரத்திலும் எதிர்பார்க்கலாம்.
எங்களது கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் 3 இடங்களில் போட்டியிடுகிறது. 4 தொகுதிகளில் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 24 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலுடன் டெல்லி செல்கிறோம். " இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story