நீலகிரியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை - 4 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறையினர்


நீலகிரியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை - 4 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறையினர்
x

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய காட்டெருமையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள தற்காலிக கழிவுநீர் தொட்டியில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து உயிருக்குப் போராடியது. இதைக் கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காட்டெருமையை மீட்க முயற்சித்து முடியாமல் போனதால், இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். முதற்கட்டமாக கயிறு மூலம் காட்டெருமையை அவர்கள் மீட்க முயற்சித்தனர். அதைத் தொடர்ந்து ஜே.சி.பி. வாகனம் வரவழைக்கப்பட்டு, கழிவுநீர் தொட்டி அருகே மண்ணை தோண்டி சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமையை பத்திரமாக மீட்டனர்.


Next Story