சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

கோப்புப்படம் 

சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

இதனால் சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story