தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழக பகுதிகளின் மீது நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் (24-11-2023), நாளையும் (25-11-2023) பரவலாக அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளுர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளைய தினம் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story