'பா.ஜ.க. தொண்டர்களை முதல்-அமைச்சர் நேரடியாக மிரட்டி உள்ளார்; நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம்' - அண்ணாமலை பேட்டி
செந்தில் பாலாஜி கைதுக்கு பின் முதல்-அமைச்சரின் நடவடிக்கை இயல்பானதாக இல்லை என்று அண்ணாமலை கூறினார்.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசினார். அந்த வீடியோவில், 'தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை' என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், செந்தில் பாலாஜி கைதுக்கு பின் முதல்-அமைச்சரின் நடவடிக்கை இயல்பானதாக இல்லை என்றும், முதல்-அமைச்சர் இவ்வளவு கோபப்பட்டு பார்த்ததில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் பா.ஜ.க. தொண்டர்களை முதல்-அமைச்சர் நேரடியாக மிரட்டி உள்ளார் என்று தெரிவித்த அண்ணாமலை நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம் என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் பழைய பா.ஜ.க. போல் தற்போது உள்ள பா.ஜ.க. இல்லை என்பதை முதல்-அமைச்சரிடம் தெரிவித்துக் கொள்வதாகவும் அண்ணாமலை கூறினார்.