எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பெண் என்ஜினீயர் சாவு


எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பெண் என்ஜினீயர் சாவு
x

செங்குன்றம் அருகே எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பெண் என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவருடைய மகள் சில்வன மேரி (வயது 23). என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார். இவரது வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் எலிகளை கொல்வதற்காக உணவில் எலி மருந்தை கலந்து வைத்து இருந்ததாக தெரிகிறது. இது தெரியாமல் சில்வன மேரி, அந்த உணவை எடுத்து சாப்பிட்டு விட்டார். இதில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை பாடியநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சில்வன மேரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story