சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர்கள் இடையே காரசார விவாதம்


சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர்கள் இடையே காரசார விவாதம்
x

உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஏன் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. அவை கூடியதும் சபாநாயகர் அப்பாவு மறைந்த முக்கியப் பிரமுகர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை வாசிக்க உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் முதல் அமைச்சர் ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். முதல் அமைச்சர் பேசியதை அடுத்து சபாநாயகர் அப்பாவு, தீர்மானத்தின் மீது பேசலாம் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அனுமதியளித்தார். இதையடுத்து உறுப்பினர்கள் பேசினர்.

அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவையில் பேசும்போது அமைச்சர்களுக்கும் அவருக்கும் இடையே காரசாரவிவாதம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இந்த 10 சட்ட முன்வடிவுகளையும் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாக நான் கருதுகிறேன்" என்று பேசினார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் நிலுவையில் வைக்கவில்லை. திருப்பி அனுப்பி வைத்துள்ளார்" என்றார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஏன் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்? என்றார். இதற்கு பதிலளித்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், நாளைக்கு வழக்கு விசாரணைக்கு வரும்போது மசோதாக்களை திருப்பி அனுப்பி விட்டேன் என ஆளுநர் கூறுவார். அதனால்தான், இன்றே இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ராஜ் பவனுக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றார். இவ்வாறு காரசார விவாதம் நடைபெற்றது.


Next Story